தம்புள்ளையில் பாழடைந்த வீட்டில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட 14 வயதுச் சிறுமியின் சடலத்திற்கு நேற்று தம்புள்ளை பொது மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
14 வயதுச் சிறுமியின் உயிரிழப்புக்கு காரணம் வெளியானது
38
views

தம்புள்ளையில் பாழடைந்த வீட்டில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட 14 வயதுச் சிறுமியின் சடலத்திற்கு நேற்று தம்புள்ளை பொது மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

சிறுமியின் இறுதிச் சடங்கில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

குறித்த சிறுமியின் உடலுக்கு தம்புள்ளை மாவட்ட பொது மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை நடைபெற்றது.

இதன்போது வன்முறைச் செயல் காரணமாக மரணம் நிகழ்ந்தது என்று பிரேதபரிசோதனையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பரிசோதனைக்காக சிறுமியின் உடல் பாகங்களை ஆய்வாளர் துறைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் அந்த சிறுமி எப்படி கொல்லப்பட்டார் என்பது இன்னும் தெரியவரவில்லை.

சிறுமியைக் கொன்ற சந்தேகத்தின் பேரில் தப்பியோடிய தம்பதியை கைது செய்ய மாத்தளை பிரிவுக்கு பொறுப்பான சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இரண்டு குழுக்கள் மற்றும் தம்புள்ளை காவல்துறையின் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ஐந்து பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் நான்காவது பெண் பிள்ளையான இவர், தம்புள்ளை அதுபாரயாய என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் தனது பெற்றோருடன் வசித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

YOUR REACTION?

Facebook Conversations