பிள்ளைகளின் எதிர்கால கல்விச் செலவுக்கு தாம் பொறுப்பு" எனக்கூறி இனந்தெரியாத நபர்களால், அரசியல்கட்சிகள், அரசியல் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயரைப் பயன்படுத்தி தொலைபேசி அழைப்புகள் ஊடாக நூதனமாக பணம் வசூலுக்கும் செயற்பாடொன்று யாழ்ப்பாணத்தில் தற்போது இடம்பெறுவதாகவும், அது தொடர்பில் கவனமாக இருக்குமாறும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.  
அங்கஜன் யாழ்.மக்களுக்கு விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!
393
views

பிள்ளைகளின் எதிர்கால கல்விச் செலவுக்கு தாம் பொறுப்பு" எனக்கூறி இனந்தெரியாத நபர்களால், அரசியல்கட்சிகள், அரசியல் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயரைப் பயன்படுத்தி தொலைபேசி அழைப்புகள் ஊடாக நூதனமாக பணம் வசூலுக்கும் செயற்பாடொன்று யாழ்ப்பாணத்தில் தற்போது இடம்பெறுவதாகவும், அது தொடர்பில் கவனமாக இருக்குமாறும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.  

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

அவ்வாறான பணம் வசூலிக்கும் எந்தவொரு நடவடிக்கைகளும் எக்காலத்திலும் எந்தவொரு அரசியல்கட்சிகள், அரசியல் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்னெடுக்கப்படுவதில்லை என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்துகின்றோம்.

ஆகையால் குறித்த இனந்தெரியாத நபர்கள் மற்றும் இனந்தெரியாத தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதோடு, உடனடியாக பொலிசாருக்கு தெரியப்படுத்துங்கள்.

இதே போன்ற மோசடிகள் சில மாதங்களுக்கு முன்னர் வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது என தெரிவித்தார்.

YOUR REACTION?

Facebook Conversations