அரசாங்க செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்காக திறைசேரி செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு புறம்பாக செலவு செய்தால், அதற்கான செலவுகளுக்கு நிறுவனங்களின் தலைவர்களே தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரச செலவினங்களை கட்டுப்படுத்த உத்தரவு!
21
views

அரசாங்க செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்காக திறைசேரி செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு புறம்பாக செலவு செய்தால், அதற்கான செலவுகளுக்கு நிறுவனங்களின் தலைவர்களே தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

திறைசேரியின் செயலாளரால் குறிப்பிடப்பட்டுள்ள 26-04-2022 ஆம் திகதிய 3/2020 ஆம் இலக்க தேசிய வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கையின் “பொது செலவினங்களைக் கட்டுப்படுத்துதல்” என்ற தலைப்பிலான விதிகளின்படி அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களும் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்ட சபைகளின் தலைவர்களுக்கு இன்று (15) கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

மேற்கண்ட சுற்றறிக்கை ஏற்பாடுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும், அதற்கு வெளியே ஏற்படும் செலவினங்களிற்கு சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்ட சபைகளின் தலைவர்கள் பொதுச் செலவினங்களுக்கு தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

YOUR REACTION?

Facebook Conversations