பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஆண் தொகுப்பாளர்களுக்கு நிகராக பெண் தொகுப்பாளினிகளும் மக்கள் மத்தியில் பிரபலம் தான். டிடி துவங்கி பிரியங்கா வரை விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினிகளாக இருந்து வந்த நிலையில் விஜய் டிவி இளம் தொகுப்பாளினியாக களமிறங்கி இளசுகள் மனதில் இளம் ஜாக்லின்.
என்னை கொடுமை பண்ணறாங்க! ஆளே காணாமல் போன விஜே ஜாக்குலின் கதறி வெளியிட்ட வீடியோ!
20
views

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஆண் தொகுப்பாளர்களுக்கு நிகராக பெண் தொகுப்பாளினிகளும் மக்கள் மத்தியில் பிரபலம் தான். டிடி துவங்கி பிரியங்கா வரை விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினிகளாக இருந்து வந்த நிலையில் விஜய் டிவி இளம் தொகுப்பாளினியாக களமிறங்கி இளசுகள் மனதில் இளம் ஜாக்லின்.

இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் ஆகிய சீரியலில் ஜாக்லின் நடித்து உள்ளார்.

இதனைத்தொடர்ந்து, தேன்மொழி சீரியலில் நடித்து வந்தார். இந்த சீரியலும் எதிர்பார்த்த அளவு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை என்பதால் இந்த சீரியலை திடீரென்று நிறுத்தினர்.

அதன் பின்னர் சீரியலை தொடர்ந்து வந்தார் ஜாக்லின். இதனிடையே, சமீப காலமாக இவரை எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் காண முடியவில்லை.

அதேபோல் இவர் சமீப காலமாக சமூக வலைதளத்தில் கூட எந்த ஒரு புகைப்படங்களையும் பதிவிடாமல் இருந்து வருகிறார்.

அதற்கு முக்கிய காரணமாக ஜாக்குலின் தீவிர உடல் எடை குறைப்பில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக தனியாக ஒரு பயிற்சியாளரை வைத்து கடுமையாக உடற்பயிற்சிகளை செய்து உடல் எடையை குறைத்து வருகிறார்.

மேலும், இவர் சமீபத்தில் இவர் உடற்பயிற்சி செய்யும் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.   

அவர் வெளியிட்ட வீடியோவில், தனது பயிற்சியாளர் தன்னை மிகவும் கொடுமை படுத்துகிறார் என்றும் தனக்கு மயக்கம் வருகிறது, வாந்தி வருகிறது அப்பயும் எல்லாம் நார்மல்னு சொல்றாங்க என்றும் கதறி ஜாக்குலின் பேசியுள்ளார்.

A post shared by Jeeva (மாற்றமாயிரு) (@geezsquad2.0)