நிவாரணங்கள் ஏதும் நிதியமைச்சிடமிருந்து கிடைக்காவிடின் எரிபொருள் விலைகளை அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படலாம்! எரிசக்தி அமைச்சர்
10
views

நிவாரணங்கள் ஏதும் நிதியமைச்சிடமிருந்து கிடைக்காவிடின் எரிபொருள் விலைகளை அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.

பெற்றோல் லீற்றரொன்றின் விலையை 15 ரூபாவினாலும், டீசல் லீற்றரொன்றின் விலையை 20 ரூபாவினாலும் அதிகரிக்குமாறு லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் கோரியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் அதற்காக துறை சார்ந்த அவரிடமிருந்து கிடைக்கபெறும் நிவாரணம் தொடர்பில் இதுவரை எவ்வித அறிவிப்பும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மற்றும் நிர்மாணத்துறையில் மேலும் சில மூலப்பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதால் குறித்த பொருட்களுக்கான பற்றாக்குறையும் நிலவி வருதாக வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

YOUR REACTION?

Facebook Conversations