ஆசிய பிராந்தியத்தில் சுற்றுலா செல்வதற்கு பாதுகாப்பான நாடாக இலங்கையை உலக சுற்றுலா பேரவை பெயரிட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கிமாலி பெர்னாண்டோ (Kimali Fernando)தெரிவித்துள்ளார்.
இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு கிடைத்த பாரிய வெற்றி
20
views

ஆசிய பிராந்தியத்தில் சுற்றுலா செல்வதற்கு பாதுகாப்பான நாடாக இலங்கையை உலக சுற்றுலா பேரவை பெயரிட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கிமாலி பெர்னாண்டோ (Kimali Fernando)தெரிவித்துள்ளார்.

"இது ஒரு பெரிய வெற்றி," என்று அவர் கூறினார்.

இதேவேளை, கொவிட் தொற்றை அடுத்து பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு தற்போது தளர்த்தப்பட்ட நிலையில் கடந்த மூன்று மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை வேகமாக அதிகரித்துள்ளதாகவும், கடந்த 11 நாட்களில் 31,688 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் 22,771 சுற்றுலாப் பயணிகளும், நவம்பரில் 44,294 பேரும், டிசம்பரில் 31,688 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 

YOUR REACTION?

Facebook Conversations