நாட்டில் எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்கும், விநியோகிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் பொருத்தமான நிறுவனங்களை மதிப்பீடு செய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் எரிபொருள் வழங்கலை சீரமைக்க புதிய திட்டம்
18
views

நாட்டில் எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்கும், விநியோகிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் பொருத்தமான நிறுவனங்களை மதிப்பீடு செய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த தகவலை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த குழு நேற்று (05) நியமிக்கப்பட்டதாக அவர் டுவிட்டர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, சிபெட்கோ ( CEYPETCO ) மற்றும் லங்கா ஐஓசி ( Lanka IOC) ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து எதிர்காலத்தில் இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட பல நிறுவனங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

YOUR REACTION?

Facebook Conversations