மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் மருந்து பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளதாகத் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உயர்வடைந்துள்ள மருந்துப் பொருட்களின் விலை!
37
views

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் மருந்து பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளதாகத் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில், சில வகை மருந்துப் பொருட்களின் விலைகள் அசாதாரண அடிப்படையில் 300 வீதமாக உயர்வடைந்துள்ளது எனவும் இது நோயாளிகளினால் தாங்கிக் கொள்ளக்கூடிய வகையிலானது அல்ல.

ஆகவே, இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்தி நோயாளிகளின் உயிர்களை காப்பாற்றுவதற்கு அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

டொலரின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி போன்றவற்றின் தாக்கத்தை அரசாங்கம் மக்கள் மீது திணிக்கக் கூடாது.

இந்நிலையில், இந்த விலை உயர்வுகளுக்கு ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் விலைக்கட்டுப்பாட்டுக்குழு உடனடியாக தீர்மானங்களை எடுக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், வலி நிவாரணிகள் மற்றும் உடலியல் மருந்துகளின் விலைகள் அசாதாரண அடிப்படையில் உயர்வடைந்துள்ளது எனவும் இது மக்களை பெரிதும் பாதிக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

YOUR REACTION?

Facebook Conversations