இலங்கையில் சீரழிந்து வரும் பொருளாதார நிலைமை குறித்து இலங்கையில் உள்ள கனேடியர்களுக்கு கனடா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையின் தற்போதைய நிலை -கனடா விடுத்துள்ள எச்சரிக்கை
13
views

இலங்கையில் சீரழிந்து வரும் பொருளாதார நிலைமை குறித்து இலங்கையில் உள்ள கனேடியர்களுக்கு கனடா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி இலங்கையிலுள்ள கனேடிய மக்களுக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் பொருளாதார நிலை மோசமடைந்து வருகிறது. பொருளாதார நெருக்கடி காரணமாக மருந்துகள், எரிபொருள், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பொருளாதார ஸ்திரமின்மை காரணமாக, சுகாதாரம் உட்பட பொதுச் சேவைகள் வழங்குவதை பாதிக்கலாம். வளங்களுக்கான மட்டுப்படுத்தப்பட்ட தன்மை பாதுகாப்புச் சூழலில் சரிவுக்கு பங்களிக்கக்கூடும்.

நீண்ட இடையூறுகள் ஏற்பட்டால், உணவு, தண்ணீர் மற்றும் எரிபொருளை கையில் வைத்திருக்கவும்.

வியாபார நிலையங்கள், எரிவாயு நிலையங்கள் மற்றும் மருந்தகங்களில் நீண்ட வரிசையில் நிற்கவேண்டி வரலாம்.

உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை தொடர்பான தகவல்களுக்கு உள்ளூர் ஊடகங்களைக் கண்காணிக்கவும்.

YOUR REACTION?

Facebook Conversations