இந்த மாதத்தின் இரண்டாவது எரிபொருள் விலை திருத்தம் இன்று மேற்கொள்ளப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு முன்னதாக அறிவித்தது.
இன்று எரிபொருள் விலைத்திருத்தம்?
18
views

இந்த மாதத்தின் இரண்டாவது எரிபொருள் விலை திருத்தம் இன்று மேற்கொள்ளப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு முன்னதாக அறிவித்தது.

எரிபொருள் விலை சூத்திரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களின்படி, சர்வதேச சந்தையில் ஏற்படும் விலை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப, எரிபொருள் விலை திருத்தம் ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 15 ஆம் திகதிகளில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓகஸ்ட் 1 ஆம் திகதி, எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்ட பின்னர், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்  லங்கா ஆட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலையை மட்டும் ரூ. 10  குறைத்து, புதிய சில்லறை விலையாக ரூ. 430ஐ அறிவித்தது.

பெட்ரோல், மண்ணெண்ணெய் மற்றும் டீசல் வகைகளின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இதன்படி, லங்கா பெற்றோல் 92 ஒக்டேன் லீற்றர் ஒன்றின் சில்லறை விலை ரூ.450 ஆகவும், லங்கா பெற்றோல் 95 ஒக்டேன் யூரோ 4 ரூ.540 ஆகவும், லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 ரூ.510 ஆகவும், லங்கா மண்ணெண்ணெய் ரூ.87 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

YOUR REACTION?

Facebook Conversations