இந்தியா மற்றும் சீனாவின் நலன்களுக்கு பாதகமாக இலங்கை ஒருபோதும் செயல்படாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்தியா..! சீனாவா..! இக்கட்டான தருணத்தில் இலங்கையின் பதில்
10
views

இந்தியா மற்றும் சீனாவின் நலன்களுக்கு பாதகமாக இலங்கை ஒருபோதும் செயல்படாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் நல்லுறவுக்கும் நம்பிக்கைக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படும் வகையில் இலங்கை எதையும் செய்யாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தை சீன உளவுக் கப்பலான யுவான் வாங் - 5 11 ஆம் திகதி வந்தடையவுள்ளது.

எரிபொருள் நிரப்புவதற்காகவும் பிற தேவைகளுக்குமாக குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றை தவிர, கப்பலோ அதன் பணியாளர்களோ இலங்கையில் வேறு எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டார்கள் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், யுவான் வாங் 5 என்ற கப்பல் ஹம்பாந்தோட்டையை நோக்கி வருவதால் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இரு நாடுகளுக்கும் இராஜதந்திர மட்டத்தில் விளக்கமளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

YOUR REACTION?

Facebook Conversations