இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையில், சர்வதேச அளவில் நன்கொடையாக வழங்கப்படும் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை சரக்குக் கட்டணமின்றி ஏற்றிச் செல்வதற்கான பொறுப்பை தாம் ஏற்பதாக ஸ்ரீலங்கா ஏயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
கட்டணமின்றி ஏற்றிச்செல்ல தயார்; கைகொடுக்கும் ஸ்ரீலங்கா ஏயார்லைன்ஸ்
45
views

  இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையில், சர்வதேச அளவில் நன்கொடையாக வழங்கப்படும் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை சரக்குக் கட்டணமின்றி ஏற்றிச் செல்வதற்கான பொறுப்பை தாம் ஏற்பதாக ஸ்ரீலங்கா ஏயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள மருத்துவமனைகளுக்கு வெளிநாட்டில் இருந்து நன்கொடையாக வழங்கப்படும் மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களை இலவசமாக விமானம் மூலம் அனுப்பும் பணியை தாம் ஏற்பதன் மூலமாக, நாட்டிற்கு சிறந்த சேவையை செய்யமுடியும் எனவும் ஸ்ரீலங்கா ஏயார்லைன்ஸ் கூறியுள்ளது.

மேலும் நாட்டின் நீண்டகால மருந்துப் பற்றாக்குறையைச் சமாளிப்பதில் சிக்கல் உள்ள மருத்துவமனைகளுக்கும், உயிர்காக்கும் மருந்துகளைச் சார்ந்திருக்கும் நோயாளிகளுக்கும் விரைவாக உதவமுடியும் என நம்புவதாகவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன சமூகப் பொறுப்புப் பிரிவு, அறிவித்துள்ளது. 

YOUR REACTION?

Facebook Conversations