சிறிலங்கா அரச தலைவரின்  முன்னாள் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர,(P.B Jayasundara) பதவி விலகுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், வெளிநாட்டில் இருக்கும் தனக்கு நெருக்கமான நண்பர் ஒருவருக்கு சர்ச்சைக்குரிய வட்ஸ் அப் செய்தியை அனுப்பியுள்ளதாக தெரியவருகிறது.
கோட்டாபயவின் முன்னாள் செயலாளர் அனுப்பிய சர்ச்சைக்குரிய குறுஞ்செய்தி!
15
views

சிறிலங்கா அரச தலைவரின்  முன்னாள் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர,(P.B Jayasundara) பதவி விலகுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், வெளிநாட்டில் இருக்கும் தனக்கு நெருக்கமான நண்பர் ஒருவருக்கு சர்ச்சைக்குரிய வட்ஸ் அப் செய்தியை அனுப்பியுள்ளதாக தெரியவருகிறது.

ஜயசுந்தர பதவி விலகும் செய்தியை அறிந்து இலங்கையில் என்ன நடக்கின்றது என அவரது நண்பர் வட்ஸ் அப் தகவல் மூலம் வினவியுள்ளார்.

இதற்கு ஆறு வார்த்தைகள் கொண்ட குறுகிய பதிலை ஜெயசுந்தர அனுப்பியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு வார்த்தைகள் என்ற போதிலும் அவற்றில் மிகப் பாரதூரமான அர்த்தகங்கள் அடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த செய்தியில் ‘Only god can save our country’ என குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தமிழ் அர்த்தம் கடவுளால் மட்டுமே எமது நாட்டை காப்பாற்ற முடியும் என்பதாகும்.

YOUR REACTION?

Facebook Conversations