இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக அமைச்சரின் மெய்பாதுகாவலரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சின்ன ஊறணியை சேர்ந்த மகாலிங்கம் பாலசுந்தரனின் கொலைக்கு நீதி கிடைக்கும் வரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு குரல் கொடுக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
கொலைக்கு நீதி கிடைக்கும் வரையில் எங்கள் குரல் ஓயாது - இரா.சாணக்கியன்
323
views

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக அமைச்சரின் மெய்பாதுகாவலரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சின்ன ஊறணியை சேர்ந்த மகாலிங்கம் பாலசுந்தரனின் கொலைக்கு நீதி கிடைக்கும் வரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு குரல் கொடுக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

கடந்த 21ஆம் திகதி மட்டக்களப்பு, ஊறணி, மன்றேசா வீதியில் உள்ள அமைச்சர் ,ராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக இடம்பெற்ற அமைச்சரின் மெய் பாதுகாவலரினால் சின்ன ஊறணியை சேர்ந்த 35வயதான மகாலிங்கம் பாலசுந்தரன் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

இன்று மாலை ஊறணியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கொல்லப்பட்டவரின் உறவினர்களுடன் கலந்துரையாடினார். இதன்போது தனது மகன் திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளதாகவும் தனது மகனின் கொலைக்கு நீதி வேண்டும் என பெற்றோரால் தெரிவிக்கப்பட்டது. தனது மகனை படுகொலை செய்த பொலிஸ் உத்தியோகத்தரை தூக்கில் போடவேண்டும் எனவும் பெற்றோரால் தெரிவிக்கப்பட்டது. குடும்ப உறவினர்களுடன் கலந்துரையாடிய பாராளுமன்ற உறுப்பினர் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார், சட்ட வைத்திய அதிகாரி, சட்டத்தரணி ஆகியோருடனும் தொடர்புகொண்டு குறித்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடினார்.

அத்துடன் எதிர்காலத்தில் குறித்த குடும்பத்திற்கு தேவையான உதவிகளை முன்னெடுக்க தயாராகவுள்ளதாகவும் கொல்லப்பட்ட இளைஞனுக்கு அரசாங்கம் நஸ்ட ஈட்டினை வழங்கவேண்டும் எனவும் ,தன்போது தெரிவித்தார். தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெறும் அநீதிகளுக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு என்றும் குரல்கொடுக்கும் என இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இந்த மரணத்தினை வைத்து அரசியல் செய்யவேண்டும் என்ற நோக்குடன் செயற்படவில்லை, தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழ் மக்களுக்கு எதிரான மேற்கொள்ளப்படும் அநீதிகளுக்கு குரல்கொடுக்கும் கட்சியாகவே இருந்து வருகின்றது. அந்த வகையில் இந்த சகோதரருக்கும் நீதி கிடைக்கவேண்டும் என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் நானும் உறுதியாகவுள்ளோம். இந்த சம்பவத்திற்கு பின்னால் உள்ள உண்மைத்தன்மையினை அனைவரும் அறியவேண்டும்.

நாங்கள் பாடசாலையில் படிக்கும்போது ஒரு கேள்விக்கு நான் விடையினை தந்து எது சரியென்று கேட்டிருப்பார்கள் அதேபோல்தான் இந்த மரணம் தொடர்பாக நான்கு, ஐந்து காரணங்கள் சொல்லப்படுகின்றது. இராஜாங்க அமைச்சர் இதற்கும் தனக்கும் தொடர்பில்லை, இதனை ஒரு தனிப்பட்ட சம்பவம் என்று சொல்லியுள்ளார்.

அவ்வாறானால் குறித்த மெய்பாதுகாவலர் குறித்த இளைஞரை சுட்டது தொடர்பான மர்மத்தினை அறியவேண்டும். இதற்கு இராஜாங்க அமைச்சரும் ஒத்துழைப்பு வழங்குவார் என்று நம்புகின்றேன். குறித்த சம்பவம் தொடர்பில் ஒன்றுக்கொன்று மாறுப்பட்ட கருத்துகள் வெளிவருகின்றது. இந்த நிலையில் குறித்த இளைஞனின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வரையில் நாங்கள் இந்த குடும்பதுடனும் கிராமத்துடனும் தோல்கொடுத்து நிற்போம்.'

YOUR REACTION?

Facebook Conversations