கொழும்பு , மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும் கொரோனா உப திரிபு ஒன்று வேகமாகப் பரவுவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் ஒவ்வாமை நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல்துறைப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு மற்றும் அண்டிய பகுதிகளுக்கு அபாயம்! வேகமாக பரவும் உப திரிபு
18
views

  கொழும்பு , மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும் கொரோனா உப திரிபு ஒன்று வேகமாகப் பரவுவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் ஒவ்வாமை நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல்துறைப் பிரிவு தெரிவித்துள்ளது.

24 கொரோனா நோயாளர்களின் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியதில், 20 மாதிரிகளில், இந்தப் புதிய உப திரிபு கண்டறியப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவின் விசேட வைத்தியர் சந்திம ஜீவந்தர ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

‘டியூ – 5’ என்ற கொரோனா உப திரிபானது, கொழும்பில் வேகமாகப் பரவுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், மேலும் சில கொரோனா நோயாளர்களின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

குறித்த வைரஸ் தொடர்பான புதிய தகவல்களை அதன் பின்னர் கண்டறிய முடியும் எனவும் விசேட வைத்தியர் சந்திம ஜீவந்தர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

YOUR REACTION?

Facebook Conversations