லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெசர ஜயசிங்க இன்று (13) பதவியில் இருந்து நீக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லிட்ரோ தலைவர் பதவி நீக்கப்படுகிறார்?
24
views

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெசர ஜயசிங்க இன்று (13) பதவியில் இருந்து நீக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் தலைவர் ரேணுகா பெரேரா நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிவாயு தட்டுப்பாடு மற்றும் எரிவாயு கலவை தொடர்பில் நாட்டில் ஏற்பட்டுள்ள பாரதூரமான சூழ்நிலையை கருத்திற்கொண்டு ஜெயசிங்க தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் தலைவர் அனில் கொஸ்வத்த பதவி விலகியதையடுத்து திஷார ஜயசிங்க அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் லிட்ரோ எரிவா நிறுவனத்திற்கு இரண்டு தலைவர்கள் நியமிக்கப்பட்டதுடன் மூன்றாவது தலைவராக ரேணுகா பெரேரா நியமிக்கப்படவுள்ளார்.

YOUR REACTION?

Facebook Conversations