முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்‌ஷ அண்மையில் நாடு திரும்பவுள்ளார்.
மீண்டும் அரசியல் களத்தில் கோட்டாபய - பக்க பலமாக நாமல்
14
views

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்‌ஷ அண்மையில் நாடு திரும்பவுள்ளார்.

இந்நிலையில் அவர் விரும்பினால் தொடர்ந்தும் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட முடியும் எனவும் அதற்கு பக்க பலமாக நாம் இருப்போம் எனவும் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள் அதிபரின் வீசா காலம் எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் முடிவுக்கு வருவதாகவும் தான் இலங்கைக்கு வரும்போது தனக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் தங்கியிருப்பதற்கு மேலும் 14 நாட்கள் அனுமதி வழங்குமாறு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி கோரியுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

YOUR REACTION?

Facebook Conversations