வெளிநாடு செல்வதற்காக தம்மை பதிவு செய்யும் நோக்குடன் நாடளாவிய ரீதியில் இருந்து பல இளைஞர் யுவதிகள் நேற்று கொழும்புக்கு படையெடுத்து இருந்தனர்.
நாட்டை விட்டு வெளியேற நீண்ட வரிசையில் நிற்கும் இளைஞர், யுவதிகள்
33
views

வெளிநாடு செல்வதற்காக தம்மை பதிவு செய்யும் நோக்குடன் நாடளாவிய ரீதியில் இருந்து பல இளைஞர் யுவதிகள் நேற்று கொழும்புக்கு படையெடுத்து இருந்தனர்.

இவர்கள் வெளிவிவகார அமைச்சின் முன் அதிகாலை ஒரு மணியிலிருந்து வரிசையில் நின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாடு செல்ல எதிர்பார்ப்பவர்கள் தம்மை வெளிவிவகார அமைச்சில் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளமைக்கு அமைய இவர்கள் வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு செல்ல எதிர்பார்த்திருக்கும் இலங்கையர்கள், கொரோனா பரவல் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக தமது பயணத்தை தொடர முடியாத நிலையில் இருந்தனர்.

இந்த நிலையில், நாடளாவிய ரீதியில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நிலையில், வெளிநாடுகளுக்குச் செல்ல ஏரானமானோர் தம்மை பதிவு செய்து வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர் யுவதிகள் நாட்டை விட்டு வெளியேற வரிசையில் நிற்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சீ.அலவத்துவல அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

YOUR REACTION?

Facebook Conversations