மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சர்ச்சை நடிகை ஸ்ரீநிதி திடீரென தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை ஸ்ரீநிதி மருத்துவமனையில் தற்கொலைக்கு முயற்சி...மீண்டும் கிளம்பிய சர்ச்சை
20
views

 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சர்ச்சை நடிகை ஸ்ரீநிதி திடீரென தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவமனையில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

மருத்துவமனையில் இருக்கும் ஸ்ரீநிதி மன அழுத்தத்திற்கான சிகிச்சைக்கு  ஒத்துழைப்பு தர மறுப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவர் சமீபத்தில் நடிகர் சிம்பு தன்னை காதலிப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

பின்னர் சிம்பு வீட்டின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதையடுத்து தன்னுடன் சீரியலில் நடிக்கும் நடிகைகள் குறித்தும் பல்வேறு தகவல்களை வெளியிட்டார். குறிப்பாக அவருடன் யாரடி நீ மோகினி சீரியலில் நடித்த நக்‌ஷத்ரா, திருமணம் செய்துகொள்ள உள்ள நபர் நல்லவர் கிடையாது. அதையும் மீறி அவர் திருமணம் செய்தால் விஜே சித்ராவுக்கு ஏற்பட்ட நிலைமை தான் அவளுக்கும் ஏற்படும் என கூறினார்.

பின்னர் இதுகுறித்து விளக்கம் அளித்த நக்‌ஷத்ரா, ஸ்ரீநிதி கடும் மன அழுத்தத்தில் இருப்பதால் இதுபோன்று பேசி வருவதாக சொன்னார்.

இதையடுத்து மன அழுத்ததிற்காக சிகிச்சை பெற சென்னை புழல் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் ஸ்ரீநிதி கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு கவுன்சிலிங்கும் கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது. இந்தநிலையிலேயே அவர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

YOUR REACTION?

Facebook Conversations