அச்சுவேலி காலானை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த புதன்கிழமை நான்கு கால்களுடன் பிறந்த கோழிக்குஞ்சு நான்கு நாட்களின் பின் உயிரிழந்துள்ளது.
நான்கு கால்களுடன் பிறந்த கோழிக்குஞ்சு நான்கு நாட்களின் பின் உயிரிழப்பு
45
views

அச்சுவேலி காலானை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த புதன்கிழமை நான்கு கால்களுடன் பிறந்த கோழிக்குஞ்சு நான்கு நாட்களின் பின் உயிரிழந்துள்ளது.

மகாராஜா கௌரி என்ற குடும்பப் பெண் கோழி வளர்ப்பை ஜீவனோபாயமாக கொண்டு கோழிகளை வளர்த்து வருகின்றனர்.

அவர் அண்மையில் 10 முட்டைகளை வாங்கி கோழி ஒன்றின் மூலம் அடைகாக்கச் செய்துள்ளார். அவற்றில் ஆறு குஞ்சுகள் பொரித்தன இறுதியாக பொரித்த குஞ்சு நான்கு கால்களுடன் பிறந்துள்ளது.

ஏணைய கோழி குஞ்சுகளைப் போல குறித்த கோழி குஞ்சும் சுறுசுறுப்பாக காணப்பட்டது. குறித்த கோழிக்குஞ்சை பிரதேசத்தில் உள்ள மக்கள் பார்வையிட்டு வந்தனர்.

இந்நிலையில், அந்தக் கோழிக்குஞ்சு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளது.  

YOUR REACTION?

Facebook Conversations