குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல உணவுகளை வித்தியாசமாக சாப்பிட வேண்டும் என ஆசைப்படுவார்கள். அவர்களை மகிழ்விக்கவும், உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் சத்தான உணவுகளை கொடுக்கலாம்.
நாவூறும் சுவையான கேரட் முட்டை பொறியல் - 5 நிமிடத்தில் செய்வது எப்படி?
200
views

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல உணவுகளை வித்தியாசமாக சாப்பிட வேண்டும் என ஆசைப்படுவார்கள். அவர்களை மகிழ்விக்கவும், உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் சத்தான உணவுகளை கொடுக்கலாம்.

அந்த வகையில், கேரட் முட்டை பொறியல் எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.

தேவையான பொருட்கள்

கேரட் - 1 சின்ன வெங்காயம் - 5 பச்சை மிளகாய் - 1 மஞ்சள் தூள் - சிறிது முட்டை - 2 உப்பு - தேவைக்கு ஏற்ப தாளிக்க தேவையான பொருட்கள் எண்ணெய் கடுகு உளுந்து சீரகம் கடலை பருப்பு கறிவேப்பிலை

செய்முறை விளக்கம்

முதலில் வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும். அடுத்து, கேரட்டை நன்றாக துருவி கொள்ளவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

அதன் பிறகு கேரட், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். கேரட் வதங்கியதும் அதில் முட்டையை உடைத்து ஊற்றிக் கிளறிவிடவும்.

மேலும், இரண்டும் நன்றாக வெந்து பூப்போல் உதிரியாக வந்ததும் இறக்கவும். இப்போது சுவையான கேரட் - முட்டை பொரியல் ரெடி. இது எல்லா வகையான சாதத்திற்கும் நன்றாக இருக்கும்.

YOUR REACTION?

Facebook Conversations