கச்சா பாதாம் பாடலை பாடியவருக்கு ரசிகர் ஒருவர் கொடுத்த பரிசை கண்டு நெகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.
நினைச்சுகூட பார்க்கவில்லை... கச்சா பாதாம் பாடியவருக்கு ரசிகர் கொடுத்த அதிர்ச்சி பரிசு!
34
views

கச்சா பாதாம் பாடலை பாடியவருக்கு ரசிகர் ஒருவர் கொடுத்த பரிசை கண்டு நெகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.

நவீன காலத்தில் என்ன செய்தாலும் அவை இணையத்தில் ட்ரெண்டாகுவது வழக்கமாகிவிட்டது. அப்படி தெருவில் கடலை விற்று வந்த பூபன் பத்யாகர் என்பவருக்கு ஆல்பம் பாடலில் பாட அதிர்ஷ்டம் அடித்தது.

மேற்கு வங்காள மாநிலத்தில் குரல்ஜூரி எனும் கிராமத்தை சேர்ந்த இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். பாடல் பாடுவதை பொழுதுபோக்காக வைத்திருந்த இவர், கச்சா பாதாம் பாடல் அப்பகுதி மக்களால் விரும்பி கேட்கப்பட்ட ஒரு பாடல். இணையத்திலும் வைரலானது.

அதன் பின்னர், யூடியூப் ஆல்பம் பாடலில் பாடிய இவருக்கு, ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமே உருவாகியது. இந்நிலையில், சமீபத்தில் டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருக்கிறார் பூபன்.

அப்போது அவரது ரசிகர் ஒருவர் ஐபோன் 13-ஐ பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளார். இதுகுறித்து பூபன் தெரிவிக்கையில், ஐபோன் ரசிகர் எனக்கு கொடுத்ததில் மிக்க மகிழ்ச்சி.

இதை நான் எதிர்ப்பார்க்கவே இல்லை. டெல்லியை சேர்ந்த ஒருவர் என் பாடலை கேட்டு பரிசாக அளித்தார். மக்கள் என்னை ஆசீர்வதித்துள்ளனர்.

இப்போது பரவலாக அறியப்படுகிறேன். என் வாழ்க்கையில் இப்படி நல்ல விஷயங்கள் நடக்கும் என நினைக்கவில்லை.

இந்த போனில் தான் புகைப்படங்கள் எடுத்து வருகிறேன் எனக்கூறியுள்ளார்.

YOUR REACTION?

Facebook Conversations