தனியார் நிறுவனங்களிலிருந்து அரசாங்கத்தினால் வாடகைக்கு எடுக்கப்பட்ட சுமார் 250 வாகனங்கள் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றிற்கு அரசாங்கம் மாதாந்த வாடகை செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எரிபொருள் பற்றாக்குறையால் குறித்த வாகனங்கள் ஓடாமல் நிறுத்தப்பட்ட நிலையில் மாதாந்த வாடகை செலுத்தப்பட்டு வருகின்றது. அதேசமயம் இவ்வாறு ஒரு வாகனத்துக்கு குறைந்தபட்ச மாத வாடகை 2 லட்சம் ரூபாவுக்கு மேல் வாடகை செலுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, செலவுகளைக் கட்டுப்படுத்தவும், வாகனங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தவும் நிதியமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், பல அரச நிறுவனங்கள் அந்த அறிவுறுத்தல்களைப் புறக்கணித்து, வாடகை செலுத்தி வாகனங்களை நிறுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Facebook Conversations