அடுத்த வாரம் பாடசாலைகளின் செயற்பாடுகள் தொடர்பிலான இறுதித் தீர்மானம் இன்று எட்டப்படவுள்ளது. இன்று பிற்பகல் கூடவிருக்கும் கல்வி அதிகாரிகளின் மதிப்பீட்டின் பின்னர் அறிவிப்பு வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலைகள் தொடர்பில் இன்று இறுதித்தீர்மானம்!
22
views

  அடுத்த வாரம் பாடசாலைகளின் செயற்பாடுகள் தொடர்பிலான இறுதித் தீர்மானம் இன்று எட்டப்படவுள்ளது. இன்று பிற்பகல் கூடவிருக்கும் கல்வி அதிகாரிகளின் மதிப்பீட்டின் பின்னர் அறிவிப்பு வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்துத் துறை தொடர்பான சிக்கல்களால் கொழும்பு கல்வி வலயம் மற்றும் புறநகர்ப் பகுதிகளிலுள்ள அனைத்து அரச மற்றும் தனியார் பாடசாலைகளும் கடந்த ஜூன் 20 ஆம் திகதி முதல் மூடப்பட்டன.

எனினும் நகரங்களுக்குள் இல்லாத பாடசாலைகள் தொடர்பான முடிவுகளை எடுக்க மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு போக்குவரத்து சிரமம் இன்றி கலந்துகொள்ளும் பட்சத்தில் செயற்பட அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

YOUR REACTION?

Facebook Conversations