பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா வீட்டை விட்டு கிளம்புகிறார் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில், பாக்கியாவோ கோபியை வீட்டைவிட்டு வெளியே அனுப்பும் அதிரடி ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
பாக்கியா கொடுத்த அதிரடி! வீட்டைவிட்டு வெளியேறும் பரிதாபத்தில் கோபி
38
views

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா வீட்டை விட்டு கிளம்புகிறார் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில், பாக்கியாவோ கோபியை வீட்டைவிட்டு வெளியே அனுப்பும் அதிரடி ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. இந்த சீரியலில் மனைவிக்கு தெரியாமல் தனது காதலியுடன் கணவர் தொடர்பு வைத்துள்ளதாக எடுக்கப்பட்டுள்ளது.

பாக்கியாவிற்கு கோபி செய்யும் துரோகத்தால் ரசிகர்கள் அவரைத் திட்டித்தீர்த்து வந்த நிலையில், தற்போது குடும்பத்தில் அனைவருக்கும் உண்மை தெரியவரவே பெரும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றது.

கோபிக்கு விவாகரத்து கொடுத்த பாக்கிய வீட்டிற்கு வந்த நிலையில், கோபி பாக்கியாவை வீட்டை விட்டு துரத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

வீட்டில் இருக்கும் ஜெனி, இனியா, ஈஸ்வரி பாட்டி, செழியன் என எல்லோரும் பாக்கியாவிடம் கெஞ்சும் நிலையில், கோபி எல்லோரையும் தடுப்பதுடன், பாக்கியாவை அசிங்கப்படுத்தியுள்ளார்.

இறுதியில் பாக்கியா பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே வந்த நிலையில், கோபி பெட்டியை வெளியே தள்ளிவிடுகின்றார். ஆனால் அதனுள் இருந்த ஆடை கோபியின் உடையாக இருக்கின்றது.

இதனால் குடும்பமே பெரும் அதிர்ச்சியில் இருக்க, பாக்கியா நான் எதற்காக வீட்டைவிட்டு வெளியேற வேண்டும்... நீங்கள் வெளியேறுங்கள் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

YOUR REACTION?

Facebook Conversations