பறக்கும் ஹெலிகாப்டரில் புல் அப்ஸ் எடுத்து யூடியூப்பர் ஒருவர் பலரையும் வியக்க வைத்துள்ளார்.
பறக்கும் ஹெலிகாப்டரில் புல் அப்ஸ்! கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்
12
views

பறக்கும் ஹெலிகாப்டரில் புல் அப்ஸ் எடுத்து யூடியூப்பர் ஒருவர் பலரையும் வியக்க வைத்துள்ளார்.

உலகில் பல இடங்களில் பலவிதமான சாதனைகள் நடந்துகொண்டு தான் இருக்கிறது. ஆனால் அதில் ஒரு சில செயல் தான் கின்னஸ் புத்தக்கத்தில் இடம்பிடிக்கப்படுகிறது.

கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிப்பதற்காகவே பலரும் பல வினோதமான விஷயங்களை செய்வதை கேள்விப்பட்டும் கண்டும் இருப்போம்.

அந்த வகையில், நபர் ஒருவர் இங்கே செய்திருக்கும் சம்பவம் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

நெதர்லாந்தை சேர்ந்த உடற்பயிற்சியாளரும், யூடியூபருமான ஸ்டான் பிரவுனி என்பவர் பறக்கும் ஹெலிகாப்டரில் ஒரு நிமிடத்தில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

மேலும், இதற்கு முன்பு ஒரு நிமிடத்தில் 23 புல் அப்ஸ் எடுத்த அமெரிக்காவை சேர்ந்த ரோமன் சஹ்ரத்யனை பிரவுனி பின்னுக்கு தள்ளி சாதனை படைத்தார்.  

Guinness World Records

YOUR REACTION?

Facebook Conversations