கந்தளாயில் ஏற்பட்ட விபத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமாக இருந்த மற்றைய காவல்துறை அதிகாரியின் பதவி உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பதவி உயர்வை கொண்டாடிய காவல்துறை அதிகாரிகளுக்கு நடந்த அனர்த்தம்! சம்பவ இடத்திலேயே பலி
35
views

கந்தளாயில் ஏற்பட்ட விபத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமாக இருந்த மற்றைய காவல்துறை அதிகாரியின் பதவி உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய வாகனத்தை ஓட்டி வந்த உதவி காவல் கண்காணிப்பாளரின் சேவையை நிறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

கந்தளாய் உதவி காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்துக்கு பதவி உயர்வு கிடைத்ததை அடுத்து, இதை கொண்டாடும் வகையில் இரவு விருந்து ஒன்றில் கலந்து கொண்டு காவல்துறை அதிகாரிகள் காரில் வீடு திரும்பும் போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

கடந்த 11ஆம் திகதி கந்தளாய் பிரதேசத்தில் உள்ள புகையிரத கடவையில் குறித்த கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து புகையிரத கடவையில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில், காரில் பயணித்த காவல் எஸ்.ஐ ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய எஸ்.ஐ படுகாயமடைந்த நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் கந்தளாய் தலைமையக காவல் நிலையத்தில் பணியாற்றும் நெலுவ-எல்லகாவ வந்த பகுதியைச் சேர்ந்த (எஸ்.ஜ) டி.எல்.சிறிசேன (58 வயது) எனவும்,

படுகாயமடைந்தவர் அதே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மாத்தளை-மஹாவெல பகுதியைச் சேர்ந்த (எஸ்.ஜ) டி.எம்.டி.பீ. திசாநாயக்க (55 வயது) எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்து இடம்பெற்ற போது, அதிகாரிகள் குடிபோதையில் இருந்தார்களா என்பதைக் கண்டறிந்து வாக்குமூலம் பெற நடவடிக்கை எடுத்துள்ளதாக கந்தளாய் காவல்துறையினர் தெரிவித்தனர்.

YOUR REACTION?

Facebook Conversations