சர்ச்சைக்கு பெயர் போனவர் என்றால் அது வனிதா தான். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். தற்போது பட வாய்ப்பு குவிந்து வருகிறது. ஏராளமான படங்களில் நடித்து வரும் இவர், தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
பீப் பிரியாணி சர்ச்சை.. கொதித்தெழுந்த நெட்டிசன்கள்; கூலாக அவர் கூறிய பதில்!
47
views

சர்ச்சைக்கு பெயர் போனவர் என்றால் அது வனிதா தான். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். தற்போது பட வாய்ப்பு குவிந்து வருகிறது. ஏராளமான படங்களில் நடித்து வரும் இவர், தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், சமீப நாட்களுக்கு முன்பு சமையல் வீடியோ ஒன்றை பதிவிட்டார். அந்த வீடியோ தான் தற்போது சர்ச்சையில் சிர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த சமையல் வீடியோவில், பீப் பிரியாணி செய்து இருக்கிறார்.

இந்த வீடியோ நன்றாக இருப்பதாக சிலர் பாராட்டினாலும், பலரோ இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்ஸ்டாகிராமில் கமெண்ட் செய்தனர். அதில், நீங்க எல்லாம் இந்துவா?, கருமம், நீங்க வெளியிட்டதிலேயே இதுதான் மோசமான வீடியோ என்று வறுத்தெடுக்க ஆரம்பித்தனர்.

இதனிடையே, இந்த சர்ச்சைக்களுக்கு கூலாக பதிலடி கொடுத்துள்ளார் வனிதா. அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மக்களே என்ன ஆச்சு உங்களுக்கு. என்னுடைய நட்பு வட்டத்தில் நிறைய மலையாளிகள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளனர்.

இது வெறும் உணவு தான். நான் ஏழு வயதில் இருந்தே அமெரிக்காவில் வளர்ந்தவள். இதனால், சிறு வயதில் இருந்தே பல நாட்டு உணவு வகைகளை சாப்பிட்டு இருக்கிறேன். நம்பிக்கை என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயம்.

அதை பிறர் மீது திணிக்கக் கூடாது. இது பிடிக்கவில்லை என்றால் வீடியோவில் என் மகள் கூறியது போல், உங்களுக்கு பிடித்த மாமிசத்தையோ, காய்கறியயோ வைத்து இதே பிரியாணியை சமைத்து சந்தோஷமா? சாப்பிடுங்க என்று வனிதா அதில் குறிப்பிட்டுள்ளார்.  

YOUR REACTION?

Facebook Conversations