மெதிரிகிரிய வைத்தியசாலையின் தாதி ஒருவர் மெதிரிகிரிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் நிரப்பிக் கொண்டு சென்று, அதை வேறொருவருக்கு விநியோகிக்கும் காட்சி வெளியாகியுள்ளது.
பெற்றோல் விநியோகித்த தாதி வசமாக சிக்கினார்!
26
views

மெதிரிகிரிய வைத்தியசாலையின் தாதி ஒருவர் மெதிரிகிரிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் நிரப்பிக் கொண்டு சென்று, அதை வேறொருவருக்கு விநியோகிக்கும் காட்சி வெளியாகியுள்ளது.

மெதிரிகிரிய கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு 10 நாட்களின் பின்னர் நேற்று (21) எரிபொருள் கையிருப்பு கிடைத்துள்ளதுடன், எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக பெருமளவான மக்கள் 10 நாட்களாக வரிசையில் நிற்பதை காணமுடிந்தது.

மெதிரிகிரிய பிரதேச செயலாளர் இந்திக்க கருணாரத்ன மற்றும் மெதிரிகிரிய ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் அனுரசிறி ஆகியோரின் இணக்கப்பாட்டுடன் மெதிரிகிரிய வைத்தியசாலையின் அனைத்து ஊழியர்களுக்கும் எரிபொருள் வழங்குவதற்கான விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மெதிரிகிரிய வைத்தியசாலையின் தாதி ஒருவர் சந்தர்ப்பத்தை சாதகமாக பயன்படுத்தி கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை எடுத்துக்கொண்டு சுமார் 20 மீற்றர் தூரம் சென்று மற்றொரு நபரின் உதவியுடன் கொள்கலனிற்குள் எரிபொருளை அகற்றிய சம்பவம் தொடர்பில் மெதிரிகிரிய பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். .

மெதிரிகிரிய பிரதேச செயலகத்தின் எந்தவொரு ஊழியரும் பிரதேச செயலாளரின் வேண்டுகோளுக்கு இணங்க எரிபொருள் பெற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியசாலை ஊழியர்களுக்கு எரிபொருள் விநியோகத்திற்கு முன்னுரிமை வழங்கப்படாமல் விடுவது வைத்தியசாலையின் செயற்பாடுகளை சீர்குலைப்பதாகவும், அது மக்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

இப்படிப்பட்ட சூழலில், இதுபோன்ற செயல்களை சமூகம் ஏற்காது என்று பலர் கூறுகின்றனர்

இது தொடர்பில் மெதிரிகிய ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகர் அனுரசிரியிடம் வினவிய போது, இந்த மோசடியில் ஈடுபட்ட சிறு ஊழியர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார். இது தொடர்பாக மாவட்ட மருத்துவ கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

YOUR REACTION?

Facebook Conversations