பெரியாரின் சிலையை உடைக்க வேண்டும் என்று பேசிய ஸ்டண்ட் மாஸ்கர் கனல் கண்ணனை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் அதிரடி கைது!
20
views

பெரியாரின் சிலையை உடைக்க வேண்டும் என்று பேசிய ஸ்டண்ட் மாஸ்கர் கனல் கண்ணனை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1 ம் தேதி சென்னையில் நடைப்பெற்ற இந்து முன்னணி கூட்டத்தில் திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன், பெரியார் பற்றி அவதூறாக பேசி இருந்தார்.

கனல் கண்ணனின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரன், சென்னை காவல் ஆணையரகத்தில் கனல் கண்ணனை கைது செய்ய கோரி புகார் அளித்திருந்தார்.

பின் கனல் கண்ணனை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து அவர் தலைமறைவானார்.

ஐகோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த நிலையில், புதுவையில் வைத்து கனல் கண்ணனை அதிரடியாக போலீசார் இன்று கைது செய்தனர்.

மேலும், விசாரணைக்கு பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளார். தொடர்ந்து கமிஷனர் அலுவலகத்தில் கனல் கண்ணனிடம் விசாரணை நடத்தி போலீசார் வாக்குமூலம் பதிவு செய்கிறார்கள்.

YOUR REACTION?

Facebook Conversations