கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் இரு நபர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் பொல்லால் தாக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் உடக பிரிவு தொிவித்துள்ளது.
வத்தளை-ஹூனுப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயது வயோதிபரே சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Facebook Conversations