மட்டக்களப்பு கிரான் நாகவத்தை கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இருவர் கடலில் மூழ்கி காணமல் போயுள்ளனர். மேலுமொருவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.
பொங்கல் நாளில் சோகம்: கிரானில் 2 மாணவர்கள் கடலில் மூழ்கி மாயம்!
14
views

மட்டக்களப்பு கிரான் நாகவத்தை கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இருவர் கடலில் மூழ்கி காணமல் போயுள்ளனர். மேலுமொருவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.

பிரதான வீதி, கிரானைச் சேர்ந்த ஜீ.சுஜானந்தன் (16). பாடசாலை வீதி, கிரானைச் சேர்ந்த ச.அக்சயன் (16) ஆகியோரே கடலில் மூழ்கி காணமல் போயுள்ளனர்.

இன்று பொங்கல் தினமானதால் கிரான் தேசிய பாடசாலையில் ஓரே வகுப்பில் கல்வி பயிலும் 07 மாணவர்கள் நன்பகல் வேளை அருகிலுள்ள கடற்கரைக்கு சென்று குளித்துள்ளனர்.

இன்று வழமைக்கு மாறாக கடலின் அலை உயர்வு அதிகமானதால் இருவர் கடல் அலையினால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.

காணமல் போனவரை தேடும் பணியில் கடற்படையினர், கல்குடா சுழியோடிகள் மற்றும் உள்ளுர் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக கல்குடா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

YOUR REACTION?

Facebook Conversations