புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 20 ஆக மட்டுப்படுத்தப்படும்.
மேலும், அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்களைக் கொண்ட பெரிய அமைச்சுக்களுக்கு மட்டுமே பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள்.
புதிய அரசாங்கம் இராஜாங்க அமைச்சுப் பதவிகளை வழங்குமா என்பது தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை.
அடுத்த வாரம் பாராளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்து கொள்ளப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Facebook Conversations