ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளது.
ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் வேலைநிறுத்தம் நிறைவு!
14
views

ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளது.

எவ்வாறாயினும், ரயில் சேவைகள் வழமைக்கு திரும்புவதற்கு கால அவகாசம் எடுக்கும் என சங்கம் தெரிவித்துள்ளது.

புகையிரத நிலைய அதிபர்கள் இன்று பிற்பகல் காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை அறிவித்தனர்.

சங்கத்தின் துணைத் தலைவரை பணிநீக்கம் செய்ய ரயில்வே நிர்வாகம் எடுத்ததாகக் கூறப்படும் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த வேலைநிறுத்தம் தொடங்கப்பட்டது.

ரயில்வே அதிகாரிகளின் சில நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நள்ளிரவு முதல் பல மணிநேரம் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

YOUR REACTION?

Facebook Conversations