தமிழகத்தில் சர்ச்சைகளுக்கு பெயர் போன தொலைக்காட்சி ஒன்று தான் விஜய் டி.வி இந்த தொலைக்காட்சியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளை விட அதிக பிரபலமாக இருப்பது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களே. இவர்களே அதிகளவில் சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர்.
சர்ச்சையில் சிக்கிய பிரபல தொலைக்காட்சி ஒன்றின் முக்கிய பிரபலங்கள்: அட இவருமா!
17
views

 தமிழகத்தில் சர்ச்சைகளுக்கு பெயர் போன தொலைக்காட்சி ஒன்று தான் விஜய் டி.வி இந்த தொலைக்காட்சியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளை விட அதிக பிரபலமாக இருப்பது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களே. இவர்களே அதிகளவில் சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர்.

அந்த வகையில் விஜய் டிவியின் சர்ச்சையில் சிக்கிய 5 பிரபலங்களை பற்றி பார்க்கலாம்.. அதில் முக்கியமாக கோபிநாத் இருப்பது தான் மக்களுக்கு ரசிகர்களுக்கு ஷாக்காக இருக்கிறது.

டிடி திவ்யதர்ஷினி:விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்தவர்தான் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் Koffee with DD ஏன்னும் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார் குறித்த நிலையில் அதிகமான சினிமா பிரபலங்களை பேட்டி எடுத்துள்ளார். இந்நிலையில் இவர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது வழக்கமான ஒன்றுதான். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட டிடி நடிகர் கமல்ஹாசனிடம் தனக்கு முத்தம் தருமாறு கேட்டு சர்ச்சையில் சிக்கினார். மேலும் நீச்சல் உடையில் இருக்கும் இவரது புகைப்படமும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

வி.ஜே.ரம்யா:விஜய் டிவியில் தொகுப்பாளராகவும், தற்போது பல படங்களில் நடிகையாகவும் நடித்து வருபவர் வி.ஜே.ரம்யா. தற்போது திரைப்படங்களில் நடித்து வரும் இவர் திருமணமான 10 நாட்களிலேயே.. எனக்கும் கணவருக்கும் ஒத்து வராது என்பது தெரிந்து விவாகரத்து பெற முடிவு செய்து, இருவரும் பரஸ்பரமாக பிரிந்தார். இதேவேளை திருமணத்திற்குப் பிறகு நடிக்கக்கூடாது என்று கூறிய காரணத்தால் கணவரை பிரிந்ததாக இவர் கூறினார். இது மிகப் பெரும் சர்ச்சைக்குள்ளானது.

கோபிநாத்:விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான நீயா நானாவை தொகுத்து வழங்குபவர் தான் கோபிநாத். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு பெண் ஒருவரின் படிப்புக்காக உதவி செய்வதாக அவர் வாக்களித்தார். இந்நிலையில் அவரை தொடர்பு கொண்ட அந்தப் பெண்ணிடம் உதவி செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது. இந்த செய்தியை அந்தப் பெண்ணே ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

நந்தினி: விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சரவணன் மீனாட்சி -2 சிரியலில் எதார்த்தமான நடிப்பின் மூலம் மக்கள் மனதில் நின்றவர்தான் மைனா என்று அழைக்கப்படும் நந்தினி. இவர் கார்த்திகேயன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி ஒரு வருடம் மட்டுமே கடந்துள்ள நிலையில், இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையால் கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் செய்தியால் நந்தினி ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டார். தற்போது நந்தினி யோகேஸ்வரன் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தாடி பாலாஜி: தாடி பாலாஜி தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழில் முன்னனி நடிகர்களுடன் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானர். தற்போது விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும், தொகுப்பாளராகவும் பங்கேற்று வருகிறார். இதேவேளை தாடி பாலாஜியின் மனைவி நித்யா தன் கணவர் தன்னையும், தன் குழந்தையையும் கொடுமை படுத்துவதாக காவல்துறையில் புகார் அளித்தார். தற்போது விவாகரத்து கேட்டு தாடி பாலாஜியை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த ஜோடி பிக்பாஸில் பங்கேற்று அங்கும் சண்டையிட்டு சர்ச்சை ஆனது குறிப்பிடத்தக்கது.

YOUR REACTION?

Facebook Conversations