யுவான் வாங் 5 கப்பலின் இலங்கை வருகையை தாமதப்படுத்துமாறு, சீனாவிடம் இலங்கை வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
சீன ஆராய்ச்சிக் கப்பலான யுவான் வாங் 5 ஒகஸ்ட் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்து,. 17 ஆம் திகதி வரை அங்கே தரித்து நிற்க திட்டமிட்டிருந்தது. இதற்கான அனுமதியை இலங்கை வழங்கியிருந்தது.
எனினும், இலங்கையின் இந்த முடிவிற்கு இந்தியா கடுமையான எதிர்ப்பை வெளியிட்டது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இந்தியா தனது அதிருப்தியை நேரடியாக தெரிவித்திருந்ததாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், கப்பலின் வருகையை தாமதப்படுத்துமாறு இலங்கை தற்போது சீனாவிடம் கோரியுள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைவதற்காக கடந்த ஜூலை 13ஆம் திகதி சீனாவின் ஜியாங்யின் பகுதியில் இருந்து புறப்பட்ட கப்பல் தற்போது தைவானின் கடல் எல்லையை வந்தடைந்துள்ளது.
Facebook Conversations