தோழமை என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல நாய்களுக்கும் உண்டு என்பதை சீனாவில் அண்மையில் இடம்பெற்ற ஒரு சுவாரஸ்யமான சம்பவம் உணர்த்தியுள்ளது.
சீன நாய்களுக்கு ரோசம் அதிகமாம்
334
views

தோழமை என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல நாய்களுக்கும் உண்டு என்பதை சீனாவில் அண்மையில் இடம்பெற்ற ஒரு சுவாரஸ்யமான சம்பவம் உணர்த்தியுள்ளது.

சீனாவில் ஷிஜியாஜுவாங் (Shijiazhuang) நகரில் நபர் ஒருவர் தனது காருக்கு அருகில் உறங்கிக்கொண்டிருந்த தெரு நாயொன்றைக் கடுமையாகக் காலால் உதைத்துள்ளார்.

இதனையடுத்து குறித்த நாயும் அவ்விடத்தை விட்டு அகன்றுள்ளது. இந்நிலையில் சிறிது நேரம் கழித்து மீண்டும் காரை பார்க்கச் சென்ற குறித்த நபருக்கு அதிர்ச்சி யொன்று காத்திருந்தது.

பொதுவாகவே நமக்கு ஒரு பிரச்சனை வந்தால் நாம் நமது நண்பர்களிடம் சென்று கூறுவோம். அவர்களும் தம்மால் முடிந்த வற்றை செய்வார்கள்.

அதுபோல சண்டையொன்று வந்தால் கூட அடிப்பதோ அல்லது அடிவாங்குவதோ நண்பர்கள் தான். அந்தவகையில் குறித்த நாயும் தான் அடிவாங்கியதை சக நாய்களுடன் முறையிட்டுள்ளதோடு தனது சகாக்கள் சகிதம் தன்னை உதைத்த நபரின் காரையும் கடித்து நாசம் செய்துள்ளது.

இச்சம்பவம் குறித்து வெளியான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

YOUR REACTION?

Facebook Conversations