சிக்கன் கிரேவி சாப்பிட்டு விட்டு குளிர்பானம் குடித்த தாய், மகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சிக்கன் கிரேவி வாங்கி சாப்பிட்ட தாய், மகள் அடுத்தடுத்து உயிரிழப்பு! வெளியான பகீர் சம்பவம்!
27
views

சிக்கன் கிரேவி சாப்பிட்டு விட்டு குளிர்பானம் குடித்த தாய், மகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தங்கப்ப நகரைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மனைவி கற்பகவல்லி(34). இந்த தம்பதிக்கு சண்முகபாண்டி (8) என்ற மகனும், தர்ஷினி (7) என்ற மகளும் உள்ளனர்.

இதனிடையே, கடந்த நாள் இரவு கற்பகவல்லி தனது மகளுடன் அப்பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு சென்று சிக்கன் கிரேவி வாங்கி வந்து, வீட்டில் தயார் செய்து வைத்திருந்த உணவுடன் வைத்து சாப்பிட்டுள்ளனர்.

சாப்பிட்ட சிறிது நேரத்தில் வயிற்று எரிச்சல் ஏற்படவே அருகில் உள்ள கடையில் இருந்து 10 ரூபாய் மதிப்புள்ள குளிர்பானத்தினை வாங்கி குடித்துள்ளனர்.

இதன்பின்னர், குளிர்பானம் குடித்த சிறிது நேரத்தில் இருவருக்கும் வாந்தி மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டதால், உறவினர்கள் இருவரையும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். ஆனால், சிறிது நேரத்தில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். \

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், குளிர்பானம் மற்றும் கிரேவி வாங்கிய கடையில் விசாரணை நடத்தினர். மேலும் அவர்கள் சாப்பிட்ட சாப்பாடு மற்றும் குளிர்பானம் பாட்டில் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து சோதனை செய்ய அனுப்பி வைத்துள்ளனர்.  

YOUR REACTION?

Facebook Conversations