முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2006 ஆவணி மாதம் 14 ம் திகதி சிறிலங்கா வான்படையின் யுத்த விமானங்கள் நடாத்திய மிலேச்சதனமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று தமிழர் தாயகம் எங்கும் உணர்வுகூறப்பட்டு வருகின்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் நினைவுகூரப்பட்ட செஞ்சோலை படுகொலையின் நினைவு தினம்
41
views

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2006 ஆவணி மாதம் 14 ம் திகதி சிறிலங்கா வான்படையின் யுத்த விமானங்கள் நடாத்திய மிலேச்சதனமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று தமிழர் தாயகம் எங்கும் உணர்வுகூறப்பட்டு வருகின்றது.

அந்த வகையிலே வள்ளிபுனம் பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் இன்று காலை நினைவேந்தல் நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த விமானத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட பிள்ளைகளின் உறவினர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்ணணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூக செயற்ப்பாட்டாளர்கள் என பலர் இணைந்து பொதுச்சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்து அக வணக்கம் செலுத்தி மலரஞ்சலி செலுத்தி உணர்வெளிச்சியுடன் நினைவுகூரப்பட்டது.

YOUR REACTION?

Facebook Conversations