தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை ஏலத்தில் விடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை கடற்படை பறிமுதல் செய்து வருகின்றது.
இதற்கமைய 105 கடற்கலங்கள் அரசுடமையாக்கப்பட்டு தொடர்ச்சியாக 5 நாட்கள் பகிரங்க ஏலத்திற்கு விடப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த ஏலம் எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் 5 நாட்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
7 ஆம் திகதி யாழ்ப்பாணம் காரைநகரில் 65 படகுகளையும், 8 ஆம் திகதி காங்கேசன்துறையில் 5 படகுகளையும், 9 ஆம் திகதி கிராஞ்சியில் 24 படகுகளையும், 10 ஆம் திகதி தலைமன்னாரில் 9 படகுகளையும், 11 ஆம் திகதி கற்பிட்டியில் 2 படகுகளையும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஏலத்தில் விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Facebook Conversations