நுவரெலியா - ராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்து ஐவர் உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழர் பகுதியில் ஐவர் உடல் கருகி பலியான சோகம்! சந்தேகநபருக்கு வழங்கப்பட்ட உத்தரவு
25
views

நுவரெலியா - ராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்து ஐவர் உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏழாம் திகதி இரவு 10 மணியளவில் இடம்பெற்ற இந்த தீவிபத்தில் ஆர்.ராமையா 55 வயது, அவரின் மனைவியான முத்துலெட்சுமி வயது 50, இவர்களின் மகள் டிவனியா வயது 35, குறித்த மகளின் 13 மற்றும் ஒரு வயது பிள்ளைகள் இருவர் என ஐவர் உடல் கருகி பலியாகி இருந்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர்களுடன் இதற்கு முன்னர் நெருக்கமாக இருந்தவர் எனக் கூறப்படுகின்ற ஒருவரே கைதாகி இருந்தார்.

குறித்த நபர் தீ விபத்து இடம்பெற்றதன் பின்னர் தலைமறைவாகியதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து கைதான நபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

YOUR REACTION?

Facebook Conversations