பொரளை ‘ஓல் செயிண்டஸ்’ தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் சதி உள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் அறிக்கை!
14
views

பொரளை ‘ஓல் செயிண்டஸ்’ தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் சதி உள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

தேவாலயத்திற்கு வெடிகுண்டை யார் கொண்டு வந்தார்கள், எதற்காக கொண்டு வந்தார்கள் என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் கிடைத்த விஞ்ஞான, சுற்றாடல், தொழிநுட்ப மற்றும் தனிப்பட்ட சாட்சியங்கள் தொடர்பில் உரிய துறை நிபுணர்களின் உதவியுடன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சம்பவம் தொடர்பில் 14 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் திரு.விக்கிரமரத்ன தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான விசாரணை இன்னும் நிறைவடையவில்லை எனவும், சிசிடிவி காட்சிகளையும் விசாரணைக்கு பயன்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றிலும் இதேபோன்ற வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

YOUR REACTION?

Facebook Conversations