உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி பிரதமருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தென்னிலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கர்தினால்
28
views

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி பிரதமருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 உயிர்த்தஞாயிறு தாக்குதல் காரணமாக தனது மனைவியை இழந்த ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என சுட்டிக்காட்டியுள்ள கர்தினால் முன்னாள் ஜனாதிபதி பிரதமர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழு முன்னாள் ஜனாதிபதி தாக்குதலை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் தீவிரவாதம் குறித்து கடும் நிலைப்பாட்டினை எடுக்காதமைக்காக பிரதமரையும் ஆணைக்குழு கண்டித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

+ஆணைக்குழு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் கண்டித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக மேலும் விசாரணைகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை வழங்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனக்கு நீதி வழங்கப்படவில்லை என்ற விரக்திகாரணமாக தனது பிள்ளைகளை அனாதைகளாக விட்டு நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார் என கர்தினால் தெரிவித்துள்ளார்.  

YOUR REACTION?

Facebook Conversations