ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்கவின் அனுராதபுர வீட்டுக்கு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அனுராதபுரத்தில் உள்ள பிரபல வர்த்தகர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துமிந்த திஸாநாயக்கவின் வீட்டிற்கு தீ வைத்த 4 பேர் கைது!
16
views

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்கவின் அனுராதபுர வீட்டுக்கு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அனுராதபுரத்தில் உள்ள பிரபல வர்த்தகர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு அருகில் கட்சி சார்பற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொதுஜன பெரமுன குண்டர்கள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, பொதுஜன பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் வீடுகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட சம்பவங்கள் பல பதிவாகியிருந்தன.

துமிந்த திஸாநாயக்கவின் வீடு தீயிடப்பட்ட சம்பவம் தொடர்பாக தொழிலதிபர் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

மூவர் அனுராதபுரத்தில் வசிப்பவர்கள் மற்றும் ஒருவர் மிஹிந்தலையில் வசிப்பவர். சந்தேகநபர்கள் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

YOUR REACTION?

Facebook Conversations