ரஷ்யப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் போரிஷியா அணுமின் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களையடுத்து அதன் அணுஉலைகளில் ஒன்று இன்று சடுதியாக நிறுத்தப்பட்டுள்ளது.
உலக அணுசக்தி ஒழுங்கை உலுக்கிய உக்ரைன் போர்
12
views

ரஷ்யப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் போரிஷியா அணுமின் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களையடுத்து அதன் அணுஉலைகளில் ஒன்று இன்று சடுதியாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்களுக்குரிய பொறுப்பை மையப்படுத்தி இருதரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை தொடுத்துள்ளன.

போரிஷியா அணுமின் நிலையத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதுலுக்கு ரஷ்யாவே பொறுப்பு என உக்ரைனிய அரசதலைவர் ஜெலென்ஸ்கியின் குற்றசாட்டின் பின்னணியில் உக்ரைன் மீதான இந்தப் போர் உலக அணுசக்தி ஒழுங்கை மீண்டும் ஒரு முறை உலுக்கியுள்ளது.

இன்று நடத்தப்பட்ட தாக்குதல்களில் அணுநிலையத்தில் உள்ள நைதரசன் மற்றும் ஒக்சிசன் களஞ்சியங்களை கொண்ட ஒரு கட்டிடம் கடுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளதால், ஐதரசன் மற்றும் கதிரியக்க பொருட்கள் கசிவு அபாயம் மற்றும் தீ ஆபத்து அதிகமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையத்தின் அணு உலைக்கு அருகே ரஷ்யப் படைகள் மூன்று தாக்குதல்களை நடத்தியதாக நேற்று குற்றம் சாட்டியிருந்தாலும், ஏற்கனவே ரஷ்யா இந்தப் பகுதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதால் இந்த தாக்குதல்களுக்கு உக்ரைனே பொறுப்பு ரஷ்ய இராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்தத் தாக்குதல் சர்வதேசத்துக்கு கிட்டிய ரஷ்யாவின் அவமதிப்புக்கு ஒரு புதிய எடுத்துக்காட்டென ஐரோப்பிய ஒன்றியம் இன்று கண்டனம் தெரிவித்துள்ளது. 

YOUR REACTION?

Facebook Conversations