ஹட்டன் நகரிலுள்ள அரச வங்கியொன்றில் ரூ.500 போலி நாணயத்தாள்களை மாற்றுவதற்காக வந்த பெண் ஒருவரை வங்கி உத்தியோகத்தர்கள் மடக்கிப் பிடித்து ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஹட்டன் குயில்வத்தை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே கைதாகியுள்ளார்.
வங்கியின் காசாளரை அணுகி, தற்போது பெய்து வரும் மழையினால் வீட்டில் வெள்ளம் புகுந்து பாதிப்பை சந்தித்ததாகவும், ரூ. 500 நாணயத்தாள்கள் வெள்ளத்தில் நனைந்து சேதமடைந்துள்ளதாகவும் கூறி, அவற்றை மாற்றித் தர வேண்டுமென கோரியுள்ளார்.
அந்த பெண் கொடுத்த நாணயத்தாள்களை வங்கி உத்தியோகத்தர்கள் பரிசோதித்த போது அவை போலி நாணயத்தாள்கள் என உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவரை ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
சந்தேக நபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக ஹட்டன் பொலிஸ் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்சித் ஜயசேன தெரிவித்தார்.
Facebook Conversations