வெளிநாடொன்றிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய பெண்ணொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாடொன்றிலிருந்து வந்த பெண் கட்டுநாயக்காவில் கைது
22
views

வெளிநாடொன்றிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய பெண்ணொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை தனது நெஞ்சுப் பகுதியில் வைத்து கடத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கடத்தி வந்த நகைகள் 650 கிராம் எடையுடையவை எனவும் அவற்றில் கழுத்தணிகள், மோதிரங்கள் போன்றவை காணப்பட்டதாகவும் சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். 

YOUR REACTION?

Facebook Conversations