அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்றில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பாரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விளையாட்டு வினையானது... இலங்கையை மொத்தமாக உலுக்கிய இளைஞனின் மரணம்!
23
views

அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்றில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பாரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் இன்றைய தினம் (23-06-2022) இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்றுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தில் அக்கரைப்பற்று, முதலாம் பிரிவைச் சேர்ந்த 17 வயதுடைய முகைதீன்பாவா அப்துல் காதர் சாபிக் அபான் என்பவரே  உயிரிழந்துள்ளார்.

அவர் வீடு ஒன்றின் மேல் மாடியில் சுவருக்கான வர்ணம் பூசும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போதே மின்சாரம் தாக்கிப் பலியாகியுள்ளார் என்று அக்கரைப்பற்றுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்றுப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

YOUR REACTION?

Facebook Conversations