விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றதை அடுத்து ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் பேருந்து ஒன்றை தீவைத்து கொளுத்தியுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த வயோதிபர் - தீக்கிரையானது பேருந்து - அவிசாவளையில் பெரும் பதற்றம் (படம்)
14
views

விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றதை அடுத்து ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் பேருந்து ஒன்றை தீவைத்து கொளுத்தியுள்ளனர்.

அவிசாவளை − மாலியன்கம − ரிட்டிகஹவெல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தீக்கிரையான பேருந்தில் மோதுண்டு, சைக்கிள் ஓட்டுநர் வயோதிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்தே இந்த சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொழிற்சாலையில் பணி புரியும் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தே, இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் 65 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

விபத்தை அடுத்து, பஸ்ஸின் சாரதி தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அவிசாவளை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து, பேருந்தை தமது பொறுப்பில் எடுக்க முயற்சித்த வேளையே இந்த தீ வைப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த அமைதியின்மையினால் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

YOUR REACTION?

Facebook Conversations