தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran) நேற்றையதினம் கிளிநொச்சி - கண்டாவளையில் மாட்டைப் பயன்படுத்தி உழவு செய்து நெல் விதைத்தமை மற்றும் உழவு இயந்திரத்தை இயக்கியமை ஆகியவற்றின் படங்கள் மற்றும் காணொளி சமூக ஊடகங்களில்  வெளியிடப்பட்டிருந்தது.
“விவசாயி” சுமந்திரனின் தில்லுமுல்லு அம்பலம்! வெளியான காணொளி

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran) நேற்றையதினம் கிளிநொச்சி - கண்டாவளையில் மாட்டைப் பயன்படுத்தி உழவு செய்து நெல் விதைத்தமை மற்றும் உழவு இயந்திரத்தை இயக்கியமை ஆகியவற்றின் படங்கள் மற்றும் காணொளி சமூக ஊடகங்களில்  வெளியிடப்பட்டிருந்தது.

அதுமாத்திரமல்லாமல், கிளிநொச்சியில் தனது பூர்வீக நிலத்தில் அவர் இந்த காணொளியை பதிவு செய்திருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார். 

சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்த சுமந்திரனின் காணொயில் திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டது அதில் பதிவாகியிருக்கும் குரல் வடிவங்கள் வெளிப்படுத்துகின்றன.

விவசாயம் தெரியாத நபர் ஒருவர், மாட்டின் கயிற்றினை கூட நேர்த்தியாக கட்டாமல், திட்டமிட்டவாறு காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருப்பதாக சமூக ஊடகங்களில் பரவலாக விமர்சிக்கப்படுகிறது.

அதேபோன்று பானையில் கட்டப்பட்டிருந்த மாவிலை கூட பொங்கல் பானை அடுப்பில் இருந்த வேளை கருகாமல் இருப்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருப்பதாக சமூக ஊடகத்தில் இருப்பவர்கள் கிண்டலடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எம்.ஏ. சுமந்திரன் உண்மையில் அரசியல்வாதியா? அல்லது நடிகரா என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். ஏனெனில் கிளிநொச்சியில் அவர் சினிமா பாணியிலான படப்பிடிப்பினை ஏற்பாடு செய்து நடத்தியிருக்கிறார் என்றும் கிண்டலுக்கும் நையாண்டிக்கும் ஆளாகியிருக்கிறார்.

இதேவேளை, நாட்டில் தற்போது விவசாயிகள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அதனை தனது அரசியல் சுயலாபத்திற்காகவும், அடுத்த தேர்தலை இலக்கு வைத்தும் அவர் காய் நகரத்தும் செயல்பாடுகளையும் சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் மக்கள் நெருக்கடிக்குள் தவிக்கும் பொழுது ஊடக கண்காட்சியை சுமந்திரன் நடத்தியிருப்பது அருவெறுக்கத்தக்கது என்றும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான காணொளி,

YOUR REACTION?

Facebook Conversations